1995ஆம் ஆண்டு பிளே கேர்ள்ஸ் படத்தின் மூலம் தனது 18 வயதில் நடிகையாக அறிமுகமானவர் ஷகீலா. ஏராளமான அடல்ட் படங்களில் நடித்துள்ளார் ஷகீலா. ஷகீலா என்றாலே அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்பதுதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பிரபலமானவர் ஷகீலா. ஷகீலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி சினிமா படங்களிலும் நடித்துள்ளார்.
அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
Radhika Apte: ரஜினி ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் ஹாட் க்ளிக்ஸ்!
கவர்ச்சி நடிகை என்ற ஷகீலாவின் அடையாளத்தை மாற்றியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்று சொல்லலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷகீலாவுக்கும் அந்த பங்கேற்றிருந்த சக போட்டியாளரான புகழுக்கும் இடையிலான அம்மா மகன் உறவு வெகுவாக கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் ஷகீலாவை அம்மா என்றே அழைத்து வந்தனர்.
தற்போது யூட்யூப் சேனர்களில் நிககழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகை ஷகீலா. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ஷகீலா, உருக்கமாக பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதாவது, ஷகீலாவை தனனை பார்த்ததற்கும் தற்போது ஷகீலா அம்மாவை தன்னை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக கூறியுள்ளார்.
Suriya: அவர் படத்தில் நடிக்க கூடாது… சூர்யாவுக்கு ஆர்டர் போட்ட ஜோதிகா… பயில்வான் பரபரப்பு தகவல்!
மேலும் தன்னை ஆன்ட்டி என்று அழைப்பவர்களிடம் கூட அம்மா என்று கூப்பிடுங்கள் என தானே சொல்வதாகவும் அம்மா என்று அழைப்பது தன்னை பொறுப்பாய் மாற்றுகிறது என்றும் கூறியுள்ளார் ஷகீலா.
தான் நடித்த படங்களில் பிட்டு சேர்த்து வெளியிடுகிறார்கள் என்பது தெரிந்த போது தன்னை மோசம் செய்து விட்டார்கள் என்று தோன்றியதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா. சென்சார் முடித்த படங்களில் பிட்டு சேர்த்தார்கள் என்றும் தனது 23 படங்களுக்கு சென்சார் கொடுக்காமல் வைத்திருந்தார்கள் என்றும் கூறியுள்ளார் நடிகை ஷகீலா.
Bala: அய்யோ… பாலாவா இது.. அறுவை சிகிச்சைக்கு பிறகு வெளியான ஷாக்கிங் போட்டோ!
தனது படத்தை தயாரிக்க குறைந்த செலவு தான் ஆகும் ஆனால் அதை எடுக்கவே தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுவார்கள் என்றும், அப்படி எடுக்கும் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் அவர்களை சிரமப்படுத்துவது தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார். மேலும் தான் இனிமேல் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் எனமுடிவு செய்த போது 21 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா.
2001ஆம் ஆண்டு இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன் என தான் அறிவித்த கையோடு படங்களுக்கு வாங்கியிருந்த அட்வான்ஸையும் திருப்பி கொடுத்தாக தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா. மேலும் தான் அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்தி 22 ஆண்டுகள் ஆகிவிட்டது போதும் இன்னும் பலர் தன்னை அதே ஷகீலாவாக தான் பார்க்கிறார்கள் என்றும் நடிகை ஷகீலா உருக்கமாக கூறியுள்ளார்.
Trisha: ‘த்ரிஷா என் பொண்டாட்டி.. அது தீர்மானிக்கப்பட்ட விதி’ திகில் கிளப்பும் இயக்குநர்!