சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கண்டெடுத்த இசை முத்துக்களில் ஒருவர் ஸ்வேதா மோகன்.
பாடகி சுஜாதா மோகனின் மகளான ஸ்வேதா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பாடி வருகிறார்.
இந்நிலையில், பிரபல ஜோஸ் ஆப் உடன் இணைந்து சென்னை பீனிக்ஸ் மாலில் ஸ்வேதா மோகனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், ஸ்வேதா மோகனுடன் ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னையில் ஸ்வேதா மோகனின் இசை திருவிழா
1995ம் ஆண்டு வெளியான இந்திரா திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஸ்வேதா மோகன். பிரபல பாடகி சுஜாதா மோகனின் மகளான ஸ்வேதா, சிறுமியாக இருக்கும் போதே இசைப்புயல் ஏஆர் ரஹ்மானால் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பம்பாய் படத்திலும் குச்சி குச்சி ராக்கம்மா பாடல் பாடி அசத்தினார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடி வருகிறார் ஸ்வேதா மோகன். அதேபோல், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சென்னையில் ஸ்வேதா மோகனின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஜோஸ் ஆப் உடன் இணைந்து சென்னை பீனிக்ஸ் மாலில் ஸ்வேதா மோகனின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கின்றனர். முக்கியமாக ஸ்வேதா மோகனின் அம்மா சுஜாதா மோகனும் பாடல்களை பாடவுள்ளார்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல துள்ளலான பாடல்களும், சிலிர்க்க வைக்கும் மெலடி பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறவுள்ளன. மேலும், நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டு ஸ்வேதா மோகனுக்காக ஒரு கவிதையை வாசிக்கவுள்ளாராம். இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.