ஏப்ரல் 17 முதல் கச்சிகுடா – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்: தென்னக ரயில்வே

திருவண்ணாமலை: தெலங்கானா மாநிலம் கச்சிகுடா – மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் இருந்து திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி வழியாக மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு குண்டூர், ஓங்கோல், நெல்லூர் வழியாக திருப்பதியை மறுநாள் (செவ்வாய் கிழமை) காலை 10 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருப்பதியில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு சித்தூர் (முற்பகல் 11.18 மணி–11.20), காட்பாடி (பகல் 12.10– 2.15), திருவண்ணாமலை (பிற்பகல் 2.17 – 2.18), விழுப்புரம் (பிற்பகல் 3.30 – 3.35), விருத்தாசலம் (மாலை4.12-4.14), ஸ்ரீரங்கம் (மாலை 5.35 – 5.37), திருச்சி (மாலை 6.10 – 6.15), திண்டுக்கல் (இரவு 7.12-7.15) வழியாக மதுரை ரயில் நிலையத்தை இரவு 8.45 மணிக்கு சென்றடைகிறது.

இதையடுத்து, மதுரையில் இருந்து புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. திண்டுக்கல் (காலை 6.22 – 6.25), திருச்சி (காலை 8 – 8.05), ஸ்ரீரங்கம் (காலை 8.25 – 8.27), விருத்தாசலம் (காலை 9.50 – 9.52), விழுப்புரம் (காலை 10.35 – 10.40), திருவண்ணாமலை (முற்பகல் 11.51 – 11.53), காட்பாடி (பகல் 1.35 – 1.40) சித்தூர் (பிற்பகல் 2.13 – 2.15) வழியாக திருப்பதி ரயில் நிலையத்தை மாலை 4.35 மணிக்கு சென்றடைகிறது.

பின்னர் திருப்பதில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், குண்டூர் வழியாக கச்சிகுடா ரயில் நிலையத்தை வியாழன் கிழமை காலை 7.05 மணிக்கு சென்றடைகிறது. கச்சிகுடா முதல் மதுரை வரை 21 நிலையங்களில் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, கச்சிகுடாவில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி முதல் ஜுன் 26ம் தேதி வரையும் மற்றும் மதுரையில் இருந்து ஏப்ரல் 19-ம் தேத முதல் ஜுன் 28-ம் தேதி வரையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்க்கத்தில் இருந்தும் தலா 11 முறை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.