வரும் 1 மே 2023 முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் பிரிவு கார்கள் மற்றும் எஸ்யூவி விலை 0.6 சதவீதம் வரை உநர்த்த உள்ளதாக இன்றைக்கு அறிவித்துள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக விலை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது.
சராசரி அதிகரிப்பு 0.6% ஆக இருக்கும். டாடா மோட்டார்ஸ் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் ஒட்டுமொத்த செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகரித்த செலவினங்களில் கணிசமான உயர்வின் மூலம் சில விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2023 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் டாடா நிறுவனம் இரண்டாவது முறை விலையை உயர்த்தியுள்ளது. பிப்ரவரி 1, 2023 முதல்முறை IC இன்ஜின் மாடல் வரம்பில் சராசரியாக 1.2% விலை உயர்வை மேற்கொண்டது.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவில் டியாகோ, டியாகோ EV, டிகோர், டிகோர் EV, பஞ்ச், அல்ட்ராஸ், நெக்ஸான், நெக்ஸான் EV, ஹாரியர் மற்றும் சஃபாரி போன்றவற்றை விற்பனை செய்கின்றது.