பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டில் சமூகநீதியை விதைத்த தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாருக்கும், அவருடன் எப்போதும் துணை நின்ற MR.ராதாவுக்கும் இடையேயான உறவு என்பது கலை மற்றும் சமூக தளத்தில் பேசு பொருளாகியுள்ளது.
பெரியாரின் தம்பிகள் (அண்ணா, கருணாநிதி) பெரியாரை விட்டு போன போதும், இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா. அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில் முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும், திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும்.
பெரியாருடன் எம்ஆர் ராதா
என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள், கண்டிப்பாக என் நாடகத்திற்கு வர வேண்டாம், அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதை கண்டிப்பாய் அறியவும் என்று விளம்பரத் தட்டி ஒன்றை அரங்கத்தின் வெளியே வைத்து விட்டு, 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார். அப்படியே
மீது விழுந்த கல்லும் செங்கல்லும் அவர் மீதும் விழுந்தது ஒரு முறை.
கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. அப்போது ராமன் வேடத்தை கலைக்க வேண்டும் என்று கூறிய காவல்துறையினரிடம் வேடம் கலையாது வில் கீழே விழாது, கலசம் கீழே வராது என்று கூறி ஒரு கையில் கள்ளுக் கலயமும் மறு கையில் சிகரெட்டுமாய் காவல் நிலையம் வரை நடந்தார்.
எம்ஆர் ராதா
கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே என்று திரை துறையில் இருந்து மிக தைரியாமாக கூறியவர் ராதா ஒருவரே ஆவார். தன் பெயரில் ஒரு மன்றம் திறக்க போவதாக பெரியார் கூறியபோது, அதை கூச்சத்துடன் மறுத்தார் ராதா. 1963ம் வருடம் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தை திறந்து வைத்தார் பெரியார். மற்ற நடிகர்களுக்கு புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இந்த மன்றத்தை நான் திறந்து வைக்கிறேன் என்றார் பெரியார்.
நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகளுக்காக இதை விட அதிக தொல்லைகள் வந்தாலும் ஏற்று கொள்வேன், அதில் போவது எனது உயிராக இருந்தாலும் சரி அதற்கு நான் எப்போதுமே தயார் என்று 1964ஆம் ஆண்டு பகுத்தறிவு மலரில் ராதா எழுதினார். இப்படி சாகும் வரை பெரியாரின் பெரும் தொண்டராக சுயமரியாதை வீரனாக இருந்தார். பெரியாரின் கருத்தியல் கலை வடிவம் அவர்.