பொன்னியின் செல்வனில் ஆதி சங்கரர் பாடல்

மணிரத்னம் இயக்கி உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் 2ம் பாகம் வருகிற 28ம் தேதி வெளிவர இருக்கிறது. தற்போது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணா எழுதிய பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. முதல் பாடலாக “அ க ந க…” பாடல், இரண்டாம் பாடலான “வீரா ராஜ வீரா…” வெளியானது. தற்போது மூன்றாவது பாடலாக “சிவோகம்…” என்ற சிவபக்தி பாடல் வெளியாகி உள்ளது.

ஆதிசங்கரர் எழுதிய நிர்வாண ஷதகத்தில் இடம்பெற்ற சமஸ்கிருத பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். சத்யபிரகாஷ், நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிகரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், செண்பகராஜ், டி.எஸ்.அய்யப்பன் இணைந்து பாடி உள்ளனர்.

இந்த பாடல் நடிகர் ரகுமான் நடித்துள்ள மதுராந்தக சோழன் கேரக்டரின் பின்னணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. வாரிசுரிமை அடிப்படையில் மதுராந்தகரே சோழ நாட்டின் மன்னராகி இருக்க வேண்டும். ஆனால் தாய் செம்பியன் மாதேவின் விருப்பப்படி பக்தி மார்க்கத்தில் பயணித்தார். சிவபக்கதாரான அவர் அகோரிகளுடன் சில காலம் வாழ்ந்தார். பின்னர் அகோரிகள் கூட்டத்துடன் சோழ ராஜ்யத்துக்கு வந்தார். இந்த நிகழ்வுகளின் பின்னணியாக இந்த பாடல் ஒலிக்கும் என்று பாடலோடு இணைத்து வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் மூலம் அறிய முடிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.