மாநில முதல்வர்களிலேயே ஏழ்மையானவர் இவர் தான் – ஆய்வில் தகவல்..!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற நிறுவனம் சார்பில் இந்தியாவில் உள்ள முதல்வர்களின் சொத்து விவரங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு அதன் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல்வர்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 28 மாநிலங்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் உள்ள 30 முதல்வர்களின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், மிக ஏழ்மையான முதல்வர்யாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். அவரிடம் ரூ.15 லட்சம் மட்டுமே சொத்துகள் உள்ளன. இந்த பட்டியலில், மீதமுள்ள 29 முதல்வர்களும் கோடீசுவரர்கள் ஆவார். அவர்களில் முதல் 3 இடங்களை முறையே ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (ரூ.510 கோடி), அருணாசல பிரதேச முதல்வர் பெம காண்டு (ரூ.163 கோடி) மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் (ரூ.63 கோடி) ஆகியோர் பிடித்து உள்ளனர்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்து குறைவான சொத்துகள் கொண்டவர்கள் வரிசையில் இடம் பெற்று உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இருவரும் தலா ரூ.1 கோடி சொத்துகளை வைத்திருக்கின்றனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகிய இருவரின் சொத்து மதிப்பு தலா ரூ.3 கோடி என எடுத்து காட்டப்பட்டு உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.