இந்தியாவில் இசுசூ மோட்டார் விற்பனை செய்யகின்ற D-Max V-Cross , ஹை-லேண்டர் உள்ளிட்ட அனைத்து பிக்கப் டிரக்குகள் மற்றும் mu-X எஸ்யூவி என அனைத்து மாடல்களும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு RDE விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.
2023 Isuzu Lineup
D-MAX S-CAB, D-MAX, D-MAX V-Cross, Hi-Lander, மற்றும் MU-X என மொத்தம் 5 விதமான மாடலுகளிலும் MU-X, D-MAX V-Cross, மற்றும் Hi-Lander மூன்று மாடல்களிலும் பொதுவாக 163 hp பவர் மற்றும் 360 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.9 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
D-MAX S-CAB மற்றும் D-MAX என இரண்டிலும் 78 hp பவர் மற்றும் 176 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் உள்ளது.
MU-X, டி-மேக்ஸ் V-Cross, மற்றும் ஹை-லேண்டர் என மூன்று மாடல்களும் புதிய ‘வலென்சியா ஆரஞ்சு’ நிறத்தை பெற்றுள்ளது. 2WD அல்லது 4WD ஆப்ஷனை டி-மேக்ஸ் V-Cross பெற்று 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.