Jagan: அம்மாவுக்கு ஃபேர்வெல்… மரணித்த தாய்… ஜெகனின் உருக்கமான பதிவு!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகன். விஜய் தொலைக்காட்சி ஜீ தமிழ் உட்பட பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் ஏராளமான ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஜெகன்.

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்

தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, இதய திருடன், வல்லவன், சத்தம் போடாதே, ஓரம் போ, பொறி, அயன், பையா, கோ, அம்புலி, வத்திக்குச்சி, மரியான், நான் சிகப்பு மனிதன், இரும்பு குதிரை அனேகன், ஜாக்பாட், அசுரகுரு, ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களிலும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் ஜெகன்.

Rudhran Review: செம்ம.. சூப்பர்… டாப் டக்கர்… ராகவா லாரன்ஸின் ருத்ரன்… டிவிட்டர் விமர்சனம்!

கடைசியாக ஜெகன் நடிப்பில் பல்லு படாம பாத்துக்கோ மற்றும் கோஸ்ட்டி ஆகிய படங்கள் வெளியாயின. சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் சூர்யாவுக்கு ஃபிரண்ட்டாக நடித்திருப்பார் ஜெகன். இந்நிலையில் நடிகர் ஜெகனின் தாயார் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்த ஜெகன் என் தாய்சேயாகிறாள், உடல் நலம் குறைந்நு எங்களை ஈன்றவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்… ஏதுமறியா குழந்தைப்போல் உறங்குகிறாள்… எங்களை ஈன்றபோது

எத்தனை இரவுகள்… இப்படிதானே கவலை தோயத்த அக்கறையுடன் எங்களை கவனித்திருப்பாய்.

Sneha: சினேகா இப்படிதான் பட வாய்ப்புகளை குவித்தார்…. பயில்வான் சொன்ன ரகசியம்!

இந்த ஓர் இரவில் என் நன்றி கடனை திரும்ப தர இயலாது என்பதை எண்ணி கூனிப்போகிறேன்… உன் நலம் வேண்டி என் சிவனை வேண்டுகிறேன். என பதிவிட்டிருந்தார். அவருடைய பதிவை பார்த்த பலரும் அவருடைய தாயார் விரைவில் நலம்பெறுவார் என அவருக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி ஜெகனின் தாயார் மரணமடைந்தார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் ஜெகன். அதில், ஏப்ரல் 11 அன்று நாங்கள் எங்கள் அம்மாவுக்கு விடை கொடுத்தோம். வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் முடிவடைவதைப் போலவே, என் அம்மாவும் தனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களை எழுதினார். அவர் எங்களை விட சிறந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

Khushboo: 4 வருஷம் பிரபுவுடன் வாழ்ந்த குஷ்பு… முதல் மனைவியால் மாறிய காட்சி.. நடிகை பரபரப்பு தகவல்!

மேலும் அவர் விரும்பி நேசித்த இரண்டு விருப்பமான நபர்களுடன் இணைந்திருக்கிறார். அவருடைய மகள் கவிதா, அவரது அண்ணன் ஜெயராமன். எப்போதும் போல் என்னுடன் வந்து நின்ற எனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பணிகிறேன். டாக்டர் ஜி பாலமுரளி எங்கள் வாழ்க்கையில் நீங்கள் இல்லாமல் நாங்கள் என்ன செய்திருப்போம். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மருத்துவ உதவி, ஆலோசனை மற்றும் தார்மீக ஆதரவுக்கு நன்றி டாக்டர் என பதிவிட்டுள்ளார். ஜெகனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

View this post on InstagramA post shared by Actor Jagan (@actor_jagan)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.