கன்னடத்தில் பிரபல நடிகையாக திகழ்பவர் மாளவிகா அவினாஷ். இவர் மாதவன் நடிப்பில் வெளியாக வரவேற்பை பெற்ற ‘ஜே ஜே’ படத்தில் கதாநாயகியின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் மாளவிகா அவினாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
மாளவிகா அவினாஷ் பைரவா, கைதி, கே.ஜி.எப் உள்ளிட்ட பிரபல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவிலும் குணச்சித்திர கதாபாத்திரத்திங்களில் நடித்துள்ள இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது தொடர்பான தன்னுடைய பதிவில், உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி இருந்தால் அதை சாதரணமாக எடுத்து கொள்ள வேண்டாம. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் உட்பட எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இது சாதாரண தலைவலி என்பதைவிட வேறு சிக்கல்களையும் கொண்டு வந்துவிடும்.
இந்த ஒற்றை தலைவலியை சாதரணமாக எடுத்துக்கொண்டால் என்னைப்போல் நீங்களும் மருத்துவமனையில் இருக்க வேண்டியது வரும் என பதிவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் ஒரு பக்கம் முகம் வீங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் மாளவிகா. இதனையடுத்து விரைவில் அவர் பூரண நலம்பெற வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
என்னப்பா சொல்றீங்க.. லோகேஷ், அனிருத் சேர்ந்து நடிக்க போறாங்களா.?: புது கதையா இருக்கே.!