Trisha: வார்த்தைக்கு வார்த்தை அதை சொல்லும் பிரபலம்.. த்ரிஷாவுக்கு ரசிகர்கள் கோரிக்கை!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
எல்லை மீறி ஆபாசமாக பேசி வரும் ஏஎல் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என த்ரிஷாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொதித்துள்ளனர்.

த்ரிஷாதமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல், தனுஷ், சிம்பு, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.​Pooja Ramachandran: பூஜா ராமச்சந்திரனின் புதிய மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்.. சூடாகும் இணையம்!​
பொன்னியின் செல்வன்கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. அவரது நடிப்பில் வரும் 28 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார் த்ரிஷா. பொன்னியின் செல்வன் 1 படத்திலேயே த்ரிஷாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.
​கர்ப்ப காலத்தை கொண்டாடும் நடிகை!​
எல்லை மீறும் சூர்யாஇந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே விஜய்யின் லியோ படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. இந்த படத்தின் மூலம் விஜய் த்ரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆல்பம் இயக்குநர் ஸ்பிரீட்சுவல் ஹீலர் என தன்னை தானே கூறி கொள்ளும் ஏஎல் சூர்யா, நடிகை த்ரிஷா குறித்து எல்லை மீறி பேசி வருகிறார்.
​Babloo Prithiveeraj: முதல் மனைவியை விவாகரத்து செய்தது இதனால்தான்.. மனம் திறந்த நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்!​
த்ரிஷாவுடன் திருமணம்நடிகை த்ரிஷாவும் தானும் காதலித்து வருவதாகவும், த்ரிஷா தன்னை காதலிக்கும்படி தனது காலில் விழுந்து கெஞ்சியதாகவும் தெரிவித்து வருகிறார். அதோடு வரும் நவம்பர் மாதம் தனக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளார் ஏஎல் சூர்யா. மேலும் விஜய்யுடன் நடிகை த்ரிஷா லியோ படத்தில் நடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவரை அந்த படத்தில் இருந்து நீக்குங்கள் என்றும் கூறியுள்ளார்.
​Rajinikanth: மீனாவுக்கு இன்னும் என்மேல அந்த கோபம் இருக்கு… போட்டுடைத்த ரஜினிகாந்த்!​
புகார் கொடுங்கள்ஊடகங்களுக்கு மாறி மாறி பேட்டி அளித்து வரும் ஏஎல் சூர்யா, த்ரிஷாதான் தனது மனைவி என எல்லை மீறி பேசி வருகிறார். ஆபாச வார்த்தைகளையும் த்ரிஷா மீது பயன்படுத்தி வருகிறார் ஏஎல் சூர்யா. ஏஎல் சூர்யாவின் இந்த நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். அவதூறாக பேசும் இந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுங்கள் என நடிகை த்ரிஷாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.​Trisha: ‘த்ரிஷா என் பொண்டாட்டி.. அது தீர்மானிக்கப்பட்ட விதி’ திகில் கிளப்பும் இயக்குநர்!​
விளம்பரத்திற்காகசில ரசிகர்கள் ஏஎல் சூர்யாவை அவர் தரத்திற்கு இறங்கி வச்சு செய்து வருகின்றனர். விளம்பரத்திற்காக இப்படி இல்லாததை பேசி வரும் இந்த நபரை மருத்துவமனையில் தான் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மேலும் சிலர் இதுபோன்று அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான், இதுபோன்ற ஏஎல் சூர்யாக்கள் மேலும் உருவாகாமல் இருப்பார்கள் என்றும், இவருக்கெல்லாம் பதில் சொல்லி நடிகை த்ரிஷா நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
​Bala: அய்யோ… பாலாவா இது.. அறுவை சிகிச்சைக்கு பிறகு வெளியான ஷாக்கிங் போட்டோ!​
Trisha AL Suriya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.