இந்திய சந்தையில் வர்த்தக பயண்பாட்டிற்கான வாகனங்களின் விற்பனை 2022-2023 ஆம் நிதியாண்டில் 32.88 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நாட்டின் முதன்மையான தயாரிப்பாளராக டாடா மோட்டார்ஸ் விளங்குகின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவின் அதிக வர்த்தக வாகனங்களை விற்பனை செய்கின்ற நிறுவனமாக உள்ளது. 2023 ஆம் நிதி ஆண்டின் முடிவில் சுமார் 3,67,973 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட (2,93,158) 25.52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாப் 9 வர்த்தக வாகன தயாரிப்பாளர்கள்
டாடா மோட்டார்ஸை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் 2023 நிதியாண்டில் சுமார் 2,25,661 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டை காட்டிலும் 51.24 சதவீத வளர்ச்சியாகும். இதற்கு அடுத்தப்படியாக அசோக் லேலண்ட் நிறுவனம் 1,50,138 வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 47.37 சதவீத வளர்ச்சியாகும்.
நான்காம் இடத்தில் வால்வோ ஐசர் நிறுவனம் 2023 நிதி வருடத்தில் 62,609 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 47.09 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுசூகி நிறுவனமும் விற்பனை செய்கின்ற ஒற்றை மாடலை கொண்டு பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
TOP 8 CV sales – FY2023
SL.NO | Makers | Units |
1 | டாடா மோட்டார்ஸ் | 3,67,973 |
2 | மஹிந்திரா | 2,25,661 |
3 | அசோக் லேலண்ட் | 1,50,138 |
4 | வால்வோ ஐசர் | 62,609 |
5 | மாருதி | 40,257 |
6 | டைம்லர் | 17,077 |
7 | ஃபோர்ஸ் | 12,047 |
8 | இசுசூ | 9,136 |
9 | மற்றவை | 54,573 |