ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
சூடானில் உள்ள இந்தியர்கள், தலைநகரில் குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளைத் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க தேசமான சூடான் நாட்டின் ராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் அவரது நம்பர் 2 துணை ராணுவத் தளபதி மொஹமட் ஹம்தான் டாக்லோ இடையே பல வாரங்களாக ஆழ்ந்த பதட்டங்களுக்குப் பிறகு இன்று சூடானில் வன்முறை வெடித்தது. தெற்கு கார்ட்டூமில் உள்ள துணை ராணுவபடையின் RSF தளத்திற்கு அருகே மோதல்கள் மற்றும் உரத்த குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் தலைநகரின் விமான நிலைய வளாகத்திற்குள் ராணுவப் படைகள் நுழைந்த நிலையில், கார்டூம் விமான நிலையத்தை துணை ராணுவப்படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக RSF கூறியது.
விமான நிலையத்திற்கு அருகிலும், புர்ஹானின் குடியிருப்புக்கு அருகிலும், கார்ட்டூம் வடக்கு பகுதியிலும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. மேலும் பீரங்கி குண்டுக்கள் தெருக்களை உலுக்கியதால் பொதுமக்கள் ஓடுவதைக் காண முடிந்தது என்று செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது.
துணை ராணுவமும், ராணுவம் ஒருவரை ஒருவர் சண்டையைத் தொடங்கியதாக குற்றம் சாட்டி வருகின்றனனர். “இன்று, கார்ட்டூமில் உள்ள சோபாவில் உள்ள முகாம்களுக்குள் இராணுவத்திலிருந்து ஒரு பெரிய படை நுழைந்து, அங்குள்ள துணை ராணுவப் படைகளை முற்றுகையிட்டதைக் கண்டு நாங்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டோம்,” என்று துணை ராணுவப்படை கூறியது. ஆனால் “துணை ராணுவப் படையைச் சேர்ந்த போராளிகள் கார்ட்டூம் மற்றும் சூடானைச் சுற்றியுள்ள பல இராணுவ முகாம்களைத் தாக்கினர். எனவே நாட்டைப் பாதுகாப்பதற்கான கடமையை ராணுவம் செய்கிறது” என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் நபில் அப்துல்லா AFP இடம் கூறினார்.
எல்லா விதமான கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களுடனும் அத்துமீறி தாக்குதல் நடைபெற்று வருவதாக செய்தி நிறுவனம் AFP தெரிவித்துள்ளது. கார்ட்டூமுக்கு வடக்கே உள்ள மெரோவில் உள்ள விமான நிலையத்தையும் அதன் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக RSF கூறியது. கார்ட்டூமை அதன் சகோதர நகரங்களான ஓம்டுர்மன் மற்றும் கார்ட்டூம் நார்த் உடன் இணைக்கும் நைல் நதியின் குறுக்கே உள்ள பாலங்களை துருப்புக்கள் தடுத்தன. ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் சாலையையும் சீல் வைத்தனர்.
விஷப் பறவைகள்.. ‘இந்த பறவைகள தப்பித் தவறி தொட்ராதிங்க’ – டேஞ்சர் அறிக்கை.!
இந்தநிலையில் சூடானில் பணி நிமத்தமாக இருக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அறிவிக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் மோதல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வீட்டிற்குள்ளேயே இருக்கவும், உடனடியாக வெளியில் செல்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து அமைதியாக இருங்கள் மற்றும் புதிய உத்தரவுகளுக்காக காத்திருங்கள்” என்று கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.