வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சர்வதேச விமான நிலையங்களில் கரன்சிகள் மாற்றும் கவுண்டர்களில் இந்திய கரன்சி 4-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கு, 18 நாடுகளைச் சேர்ந்த வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ‘டாலர்,’ ‘பவுண்ட்’ மற்றும் ‘யூரோ’ ஆகிய கரன்சிகளை தொடர்ந்து தற்போது இந்திய கரன்சியும் இணைந்துள்ளது. இதையடுத்து சர்வதேச விமான நிலையங்களில் ரூபாய் மாற்று கவுண்டர்களில் 4வது சர்வதேச கரன்சியாக இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படும். இதன் மூலம் அரசியல், பொருளாதார , சமூக ரீதியாக தகுதியான இடத்தை இந்தியா பெற்று வருகிறது.
Advertisement