சேலத்தில் பொளந்து கட்டிய வெயில்: இனிமேல் தான் சம்பவமே இருக்கு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “ இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை (14.04.2023 முதல் 17.04.2023) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை :

இன்றும் நாளையும் (14.04.2023 மற்றும் 15.04.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு
(செண்டிமீட்டரில்): ஏதுமில்லை.

வெப்பநிலை பற்றிய குறிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை: சேலத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.