திடீரென உடல் மெலிந்த ரோபோ சங்கர்: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: நடிகர் ரோபா சங்கர் திடீரென உடல் மெலிந்து போயிருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது சமூக வலைத்தளத்தில் குடும்ப நண்பர் ஒருவர் தனது வீட்டிற்கு வருகை தந்த போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அப்போது அவர் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மிகவும் ஒல்லியாக ரோபோ சங்கர் இருப்பதை பார்த்து அவர் உடல் மெலிந்ததற்கு என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவருக்கு உடல் நிலை பிரச்னையா என ரசிகர்கள் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ரோபோ சங்கரின் மனைவி, ஒரு படத்துக்காக அவர் உடல் எடை குறைத்துள்ளார் என தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பதிலால் திருப்தி அடையாத ரசிகர்கள், தொடர்ந்து ரோபோ சங்கரை பற்றி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

The post திடீரென உடல் மெலிந்த ரோபோ சங்கர்: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.