புதுடெல்லி: உலக வங்கி தலைவர் மால்பாஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களுக்கான அதிகாரம் வழங்குவதில் உலகம் முன்னேறி வருகிறது. இதில், இந்தியாவின் அதிலும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகள் மிகவும் பாராட்டுதலுக்குரியன.
பெண்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதில் மோடி ஆழ்ந்த அக்கறையுடனும், ஆர்வத்துடனும் பணியாற்றி வருகிறார். மேலும், டிஜிட்டல் மயமாக்கல் பெண்களுக்கு அதிக பலன்களை கொண்டு சேர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் ஒரு குழு விவாதத்தில் கலந்து கொண்ட உலக வங்கி தலைவர் மால்பாஸ் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.