வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆன்டிகுவா: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்த மெஹூல் சோக்சியை வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்ற முடியாது என, தற்போது அவர் தஞ்சம் புகுந்துள்ள ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், அவரை நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹூல் சோக்சி(63) தன் உறவினர் நிரவ் மோடியுடன் சேர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினார். கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த விசாரணை அதிகாரிகள் 2021 மே மாதம், ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருந்து தன்னை கடத்திச் சென்றதாக மெஹூல் சோக்சி முறையிட்டார். தான் கடத்தப்பட்டதாகவும் சோக்சி புகார் கூறினார். இதனை டொமினிக்கன் தீவு அரசு மறுத்தது.
டொமினிக்கன் தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன், ஆன்டிகுவாவுக்கு திரும்ப அனுப்பப்படுவதற்கான முயற்சியை மேற்கொண்ட மெஹூல் சோக்சி வழக்கறிஞர்கள் அதில் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பார்ப்புடா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
சோக்சி வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவரை வலுக்கட்டாயமாக ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவில் இருந்து வெளியேற்ற முடியாது என தீர்ப்பு வழங்கப்பட்டது.
சோக்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Advertisement