ரம்ஜான் சிந்தனைகள்-24| Ramadan Thoughts-24 | Dinamalar

அன்பு நிழலில் தங்கியிருங்கள்

ஒரு நாள் ஸெய்யதுனா ஈஸா ெவளியே செல்லும் போது மழை வந்தது.அப்போது அருகே இருந்த குடிலில், ஒரு பெண் இருப்பதை பார்த்தார். அதில் நுழையாமல் வேறிடம் சென்றார். குகை ஒன்று தென்பட்டது. அதற்குள் சிங்கம் கர்ஜித்தபடி நின்றிருந்தது.

அப்போது ஸெய்யதுனா, ”இறைவா! உன் படைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இடத்தில் ஒதுங்கி கொண்டு உள்ளன. அவற்றிற்கு நீயே இடங்களை ஒதுக்கி கொடுத்து உள்ளாய். எனக்குத்தான் ஒதுங்க இடம் இல்லை” என்றார்.

”ஒதுங்குவதற்கு உமக்கா இடமில்லை? என்னுடைய ஆழமான அன்பு என்றென்றும் உண்டு. என் அன்பு நிழலில்தான் நீர் எப்போதும் தங்கியிருக்க வேண்டும். இம்மை உமக்கு வேண்டாம். இம்மையின் ஆயுளை விட மறுமையின் ஆயுள் மிக பெரியது. இம்மையில் மனிதனின் முழு ஆயுளை மறுமையில்

ஒரு நாளுக்கு ஒப்பிடலாம்” என இறைவன் பதில் அளித்தான். அப்போது அவரது கண்முன் அழகிய மாளிகை காட்சியளித்தது. அப்போது மீண்டும் ” இந்த மாளிகை வேண்டுமானாலும் உமக்கு கிடைக்கும். ஆனால் உமக்கு அளித்துள்ள நபித்துவமானது இதைவிட பன்மடங்கு மாண்புடையது” எனத் தெரிவித்தான்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:31 மணி

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.