நோபல் நிறுவனத்தின் 1000 கோடி முதலீடு யாருடைய பணம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
போர்
திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே போர் தொடங்கியுள்ளது.
(Dmk) தலைவர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என கூறிய பாஜக (Bjp) தலைவர் அண்ணாமலை, நேற்று
Files எனும் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதேபோல் தான் கட்டியிருக்கும் 4 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச் பில்லையும் நேற்று வெளியிட்டார். மேலும் Dmk Files அடுத்த பார்ட் வரும் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அண்ணாமலை (Annamalai) வெளியிட்ட சொத்து பட்டியல் மற்றும் வாட்ச் பில் ஆகியவை சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. திமுகவினரும், பாஜகவினருக்கும் இடையே ட்விட்டரில் ஒரு போரே நடந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு முதல்வர்
(
) துபாய் பயணம் குறித்து தற்போது அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நோபல் நிறுவனம்
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நோபல் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார். அதேபோல் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், நோபல் நிறுவனத்தில் 2016ஆம் ஆண்டு இயக்குனராக இருந்திருக்கிறார்.
100 கோடி யாருடையது.?
கடந்த ஆண்டு துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார். திமுகவினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன். பதில் அளிப்பீர்களா திரு ஸ்டாலின் அவர்களே.?’’ என தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த கேள்வியும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
ஸ்டாலின் துபாய் பயணம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி, ஐந்து நாள் அரசுமுறை பயணமாக துபாய்க்குச் சென்றார். துபாயிலுள்ள, ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டார்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் அபுதாபி சென்ற ஸ்டாலின், அங்குள்ள அமைச்சர்கள், தொழிலதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இறுதியாக துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் தமிழகத்துக்குப் புறப்பட்டார்.
6 ஆயிரம் கோடி
இது குறித்து பேட்டியளித்த ஸ்டாலின், “துபாயில் ஆறு மிக முக்கியத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது. ஆகவே, இந்தப் பயணம் மகத்தான வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத்தான் இருந்தன” என தெரிவித்து இருந்தார்.