ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), வகயாமா என்ற நகரில் பொதுவெளியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கேயிருந்த நபர் ஒருவர், அவர் மீது புகை வெடிகுண்டை வீசினார். இதனால், பிரதமர் பூமியோ பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தடுமாறி கீழே விழுந்த பிரதமர் கிஷிடாவை, பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். பிரதமர் மீது வெடிகுண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்தாண்டு ஜூலை மாதம் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பொதுக்கூட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
ஒரு ஆள் பிரதமர் மீது ஏதோ ஒன்றை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து அங்கே புகை கிளம்பியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார். ஒரு பெரிய சத்தம் கேட்டதாக மற்றொரு நேரில் கண்ட சாட்சி கூறினார்.
ஜப்பான் பிரதமரை நோக்கி பைப் வெடிகுண்டு வீசப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அந்த நபரை போலீசார் தரையில் கீழே தள்ளி மடக்கிப் பிடிக்கும் வீடியோவை அந்நாட்டு அரசு ஊடகமான என்எச்கே வெளியிட்டுள்ளது.