CRPF தேர்வு: ‘பொய்.. பொய்.. பொய்’ – பாஜகவை பொளந்து விட்ட நெட்டிசன்.!

CRPF மத்திய பின்னிருப்பு காவல் படையில் காவலர்களுக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது, தென் மாநிலங்களில் களேபரங்களை ஏற்படுத்தியது. பிராந்திய மொழிகளில் நடத்தது குறித்து பல்வேறு தலைவர்களும் கேள்வி எழுப்பினர். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர்

எழுதிய கடிதத்தில், ‘‘சி.ஆர்.பி.எப் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிபெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கெனெக் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்புக் காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு காட்டக்கூடியதும் ஆகும்’’ என தெரிவித்து இருந்தார்.

அதேபோல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகனும், அமைச்சருமான கேடி ராமா ராவ், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளும் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் அறிவிப்பானது தேசிய இனங்களின் உரிமையை பறிக்கும் செயல் என காட்டமாக தெரிவித்து இருந்தார்.

ஆனால் சிஆர்பிஎப் காவலர் தேர்வு இது நாள் வரையிலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது எனவும், திடிரென தமிழக முதல்வருக்கு தமிழ் பாசம் ஏன் எனவும் பாஜகவினர் கேள்வி எழுப்பியிருந்தனர். இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ‘‘திமுக அரசு அங்கம் வகித்த, அதுவும் திமுக உறுப்பினர் இணை அமைச்சராக இருந்த கால கட்டத்திலும் இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் பேசாத திமுக, இப்போது தமிழ் மீது திடீர் பாசம் காட்டுவது ஏன்.?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் கடந்த 2013ம் ஆண்டு வரையில் சிஆர்பிஎப் காவலர் தேர்வு பிராந்திய மொழிகளில் தான் நடத்தப்பட்டது என்பதை நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதேபோல் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதல் அத்தகைய நடைமுறைகள் விலக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் வழக்கம் போலவே இது பாஜகவின் மற்றோரு பொய் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.