ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ருத்ரன் படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
ருத்ரன்ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ருத்ரன். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், நாசர், பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்த தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
Ajith: எனக்கும் குழந்தைங்க இருக்காங்க… விமானத்தில் தனியாக வந்த பெண்ணுக்கு அஜித் செய்த உதவி!
செயற்கையாக தெரிகிறதுஇதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ராகவா லாரன்ஸ் ஐடியில் வேலை பார்க்கும் ஜாலியான பையன். அப்பா நாசர் அம்மா பூர்ணிமா பாக்கியராஜ். சந்தோஷமாக ஜாலியாக இருக்கிறார்கள். அது சில இடங்களில் இயற்கையாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் தெரிகிறது. படத்தில் பாடல்கள் சூப்பர். அருமையாக டான்ஸ் ஆடியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
Silk Smitha: சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள் லிஸ்ட் பெருசு… பகீர் கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்!
ஆபாசம் காட்டவில்லைபடத்தின் முதல்பாதி அருமையாக உள்ளது. இரண்டாம் பாதி அடிதடி பழிவாங்கல் என இருக்கிறது. மரண கட்டத்திற்கு செல்லும் ராகவா லாரன்ஸ் கால பைரவர் உதவியுடன் ஃபைட் பண்ணுகிறார். மோட்டார் பைக் சண்டையில் பின்னி பெடலெடுக்கிறார். பிரியா பவானி ஷங்கர் நர்ஸாக நடித்திருக்கிறார். ஆபாசம் காட்டவில்லை, நன்றாக நடித்திருக்கிறார்.Nayanthara: தப்பா பயன்படுத்தும் நயன்தாரா… மார்க்கெட் சரிய இதான் காரணமாம்.. பிரபலம் பகீர்!
கொடூர வில்லன்அம்மா அம்மா பாட்டு 40 ஆண்டுகளுக்கு முன்பே பாடி விட்டார்கள். இப்போது லாரன்ஸ் பாடியிருக்கிறார்.
பூர்ணிமா பாக்யராஜ் அற்புதமாக நடித்துள்ளார்.
நாசரும் நன்றாக நடித்துள்ளார். காளி வெங்கட் நண்பராக ரொம்ப நல்லா நடிச்சிருக்கிறார். சரத்குமார் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஊசி போட்டு கொலை செய்கிறார் சரத்குமார். அவரது முகத்தில் கடுமையும் கொடுமையும் தெரிகிறது. அவரை இனி கொடூர வில்லனாக படங்களில் பார்க்கலாம்.
நயன்தாராவுக்கும் அது நடக்குதா?
தூக்கம் வருகிறதுமிகச்சிறந்த வில்லனாக கொடி கட்டி பறக்கிறார் சரத்குமார். கைத்தட்டலை பெற்றுள்ளார்.
இண்டர்வெலுக்கு பிறகு திரைப்படம் முன்னும் பின்னும் செல்கிறது. தூக்கம் வருகிறது. பழைய கதையாக உள்ளது. ஒளிப்பதிவு சூப்பராக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசை சூப்பர். பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிரட்டலும் அச்சுறுத்தலுமாக உள்ளது.
Priya Bhavani Shankar: மஞ்சள் நிற சேலையில் மாம்பழம் போல… ஜொள்ளுவிட வைக்கும் பிரியா பவானி ஷங்கர்!
ஒரு தடவை பாக்கலாம்இயக்குநர் கதிரேசன் புதுமையாக இயக்கியிருக்கிலாம். ராகவா லாரன்ஸை மட்டுமே நம்பி படம் எடுக்கப்பட்டுள்ளது. ருத்ரன் திரைப்படம் பாதி பொழுது போக்கு மீது போர் அறுவை. ஸ்டண்ட் சில்வா பிரம்மாதம். க்ளைமேக்ஸில் டான்ஸ் கம் ஃபைட் வருகிறது. ருத்ரன் படத்தை குடும்பத்துடன் போய் ஒரு தடவை பார்க்கலாம்.. இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Sneha: சினேகா இப்படிதான் பட வாய்ப்புகளை குவித்தார்…. பயில்வான் சொன்ன ரகசியம்!
Rudhran Bayilvan Ranganathan