ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை குறித்த ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் 44-வது ஆலோசனை கூட்டம், மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை புனித யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறும்போது, ‘‘சுமுகமான அமர்நாத் யாத்திரைக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியுள்ளனர். இந்த யாத்திரையில் மிகச் சிறந்த சுகாதார வசதி மற்றும் அத்தியாவசிய வசதிகளை பக்தர்கள் பெறுவார்கள்’’ என்றார்.