அமெரிக்க அமைச்சருடன் – ஜெய்சங்கர் ஆலோசனை| EAM S Jaishankar, US State Secy Antony Blinken discuss regional and global issues

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார். பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆன்டனி பிளின்கனுடன் சிறப்பான ஆலோசனை நடத்தினேன். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இரு தரப்பு உறவுகள் வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

latest tamil news

கடந்த மார்ச் மாதம், ஜி20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டில்லி வந்த அண்டனி பிளின்கனுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியிருந்தார்.

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.