பா.ஜ.க. முன்னாள் தலைவரான லக்ஷ்மன் சவதி, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை சித்தராமையாவின் வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், “எங்களுக்குள் எந்த நிபந்தனையும் கிடையாது. தான் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் உணர்கிறார். இவரைப் போன்ற சிறந்த தலைவர்களை காங்கிரஸில் இணைத்துக்கொள்வது எங்களின் கடமை. இன்னும் 9-10 ஆளுங்கட்சி எம்எல்ஏ-கள் காங்கிரஸில் இணைய விரும்புகிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் இணைத்துக்கொள்ளும் அளவிற்கு எங்களிடம் இடமில்லை” என்றார்.
அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற இருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க.வில் இருந்து கடந்த புதன்கிழமை வெளியேறிய லக்ஷ்மன் சவதி, தனது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் என்னுடைய முடிவினை எடுத்துவிட்டேன். மற்றவர்களைப் போல நான் பிச்சைப் பாத்திரத்திம் ஏந்திக்கொண்டு அலையவில்லை. நான் ஒரு சுயமரியாதை மிக்க அரசியல்வாதி. நான் மற்றவர்களின் செல்வாக்கில் இயங்குபவனில்லை” என்று தெரிவித்தார்.