காண்போரை மயக்கும் காசி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: ‘‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரம் தற்போது, காண்போரை மயக்கும்’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த தொகுதி. கடந்த 8 ஆண்டுகளில் வாரணாசி நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசிக்கு கடந்த மாதம் 24-ம் தேதி சென்ற பிரதமர் மோடி ரூ,1,780 கோடி மதிப்பில் 28 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாழக்கையில் ஒரு முறையாவது காசிக்கு (வாரணாசி) அவசியம் செல்ல 10 காரணங்கள் உள்ளன என ஒரு டிவிட்டர் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஸ்ரீ காசி விஸ்வநாத் ஜோதிர்லிங்கம், கங்கா ஆரத்தி, கங்கை படித்துறை, கங்கா ஸ்நானம், சங்கத் மோச்சன் அனுமன் கோயில், கங்கை நதியில் படகு சவாரி என காசியின் பெருமையை விளக்கும் 10 காரணங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அதை பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘வாரணாசியை பார்வையிட இதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளன. தற்போதைய காசி நகரம் காண்போரை மயக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் பலரும் காசி சென்று வந்த அனுபவத்தையும், படங்களையும் பகிர்ந்துள்ளனர். வரலாறு, பாரம்பரியத்தை விட காசி பழமையானது என்றும், மிக பழமையான நகரங்களில் ஒன்று என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைதியை உணரலாம்

‘‘கடந்த 6 மாதங்களில் இரு முறை காசி விஸ்வாநாதர் கோயிலுக்கு செல்ல ஏதோ ஒரு சக்தி என்னை இழுத்தது. பனாரஸ் நகரில் ஒருவர் அமைதியை உணரலாம்’’ என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.