‘சும்மா கொளுத்தி போடுவோம்’.. 5ம் வகுப்பு மட்டுமே படித்த அமைச்சர் எ.வ. வேலு.?

பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவின் கல்வித்தகுதி தான் இணையதளத்தில் இன்று பேசு பொருளாக உள்ளது. அவர் 2006ம் ஆண்டு தேர்தல் வெற்றிச் சான்றிதழில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் என்றும், 2021ம் ஆண்டு தேர்தலில் அவர் எம்.ஏ. வரலாறு என்றும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றது போலவும் ட்விட்டரில் டெரண்டாகி வருகிறது. இதை பரப்பியவர், பாஜகவின் தீவிர ஆதரவாளரும், சமீபத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவருமான கார்த்திக் கோபிநாத் என்பவர் தான்.

யார் இந்த கோபிநாத்.?

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் என்ற கோயில் உள்ளது. இங்குள்ள பெரியசாமி மலையில் துணைக் கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், நீலியம்மன், சப்த கன்னிகள் உள்பட ஏராளமான சிலைகள் இருந்தன.

இந்நிலையில், இந்த கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுடுமண் சிற்பங்களை உடைத்துவிட்டனர். அதையடுத்து பாஜக ஆதரவாளரும் ‘இளையபாரதம்’ என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவர், சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார்.

இதற்காக செயலி ஒன்றின் மூலம் நிதி வசூலும் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், கார்த்திக் கோபிநாத் ஐம்பது லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. தனது வங்கிக் கணக்கு மூலம் அவர் நிதி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மீண்டும் பொய்

இந்த சூழலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு 5ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாக கார்திக் கோபிநாத் ட்விட்டரில் பதிவு செய்ய, அங்கு பிரளயமே உண்டானது. அமைச்சரின் தேர்தல் பத்திரத்தை வெளியிட்டு, 2006ம் ஆண்டில் 5ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றவர், 2021ல் எம்.ஏ. வரலாறு பட்டதாரியாக உயர்ந்த மேஜிக் மேன் என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் ட்விட்டரில் பேசுபொருளானது.

சண்டைக்கு வந்த திராவிட பாய்ஸ்

அதையடுத்து கார்த்திக் கோபிநாத் கூறும் 2006ம் ஆண்டு பத்திரம் அமைச்சரின் கல்வி தகுதி இல்லை எனவும், சுயேச்சை எக வேலுவின் கல்விதகுதி எனவும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் ஆதராத்துடன் நிருபித்தனர். கார்த்திக் கோபிநாத் பகிர்ந்த பதிவிலேயே அது வெட்ட வெளிச்சமாக இருந்தாலும், அதை மறுத்து பொய் செய்தி வெளியிட்டதாக அவர்கள் கடிந்து கொண்டனர். பொய் செய்தி என்று தெரியாமலையே தமிழ்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதையும் போட்டு தாக்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.