குடும்ப தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், பாரத் ஜோடோ யாத்திரையின் போது கர்நாடகா அரசியல் நிலவரத்தையும் மக்களின் வலியையும் உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குருக லட்சுமி, குருக ஜோதி, அன்ன பாக்யா, யுவ நிதி ஆகிய புதிய திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்துள்ளார். குருக லட்சுமி திட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குருக ஜோதி திட்டத்தில் அனைத்து குடும்பங்களுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். அன்ன பாக்யா திட்டம் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.
யுவ நிதி திட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
newstm.in