வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்திற்கு தற்போது ஆன்மிக மாடல்தான் தேவை, திராவிட மாடல் என்பது தமிழகத்திற்கு தேவையற்ற மாடலாக உள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
சென்னையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தில் எல்.முருகன் பேசியதாவது: பாஜ., ஆளும் மாநிலங்களில் பட்டியிலின அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின அமைச்சர்கள் கடைசி இடத்தில் தான் இருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு தற்போது ஆன்மிக மாடல்தான் தேவை, திராவிட மாடல் என்பது தமிழகத்திற்கு தேவையற்ற மாடலாக உள்ளது. சேலம் பகுதியில் பட்டியலின ஊராட்சி மன்றத்தலைவர் கொடியேற்ற முடியவில்லை. வேங்கை வயலில் குடிநீரில் மனிதக்கழிவை கலந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. இது தான் போலி சமூக நிதி. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement