தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியேற அச்சப்படுகின்றனர். மதிய நேரத்தில் வெளியே வரவேண்டாம் என அரசும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, மக்கள் குளிர்பானம், பழங்கள் சாப்பிட்டு வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 11 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி, ஈரோடு மற்றும் வேலூரில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
திருத்தணியில் 104 டிகிரி, திருப்பத்தூர், சேலத்தில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், மற்றும் மதுரையில் 102 டிகிரி, நெல்லை மற்றும் தருமபுரியில் தலா 101 டிகிரி, தஞ்சாவூர், கோவையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.
இதனிடையே தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
newstm.in