வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ரூ.282க்கும், டீசல் விலை ரூ .293க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. மக்கள் அன்றாட வாழ்வில் இரு வேளை உணவு கிடைக்கவே போராடி வருகின்றனர். கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி விட, தற்போது இன்று(ஏப்ரல் 16) பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,
* பெட்ரோல் விலை ரூ.10 அதிகரித்து ரூ.282க்கு விற்பனை ஆகிறது.
* மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.
* அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.293-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.
* பாகிஸ்தானில் பண வீக்கம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிகரிக்கும்
இதற்கிடையே அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சர் இஷாக்தார் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement