புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவை!| Passenger ferry service from Puducherry to Sri Lanka soon!

புதுச்சேரி: விரைவில் புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை துவங்குகிறது.நாடு முழுவதும் உள்ள இரண்டாம் கட்ட நகர துறைமுகங்களில் சரக்கு கப்பல் சேவை மற்றும் பயணிகள் கப்பல் சேவையை அதிகப்படுத்தி துறைமுகங்களின் வருவாயை பெருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதனையொட்டி, புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் இருந்து இலங்கை, யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு 300 பயணிகள் பயணிக்கும் ‘ஏசி’ வசதியுடன் கூடிய கப்பல் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதற்காக உப்பளம் துறைமுகத்தில் உள்ள ஒரு குடோனில் இமிகிரேஷன் அலுவலகம் செயல்பட கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு சுங்கத்துறை அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து செல்லும் கப்பல் பயணத்திற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படும் என்பதால், தமிழக பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான பயணிகள் இனி புதுச்சேரி வழியாக இலங்கைக்கு செல்ல விரும்புவர் என தெரிகிறது.

இலங்கை செல்லும் பயணிகள் கப்பல் சேவையால் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்திற்கு அதிகளவு வருவாயும், மேலும் உள்ளூர் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.