வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பிரக்யாராஜ்: உ.பி.யில் முன்னாள் எம்.பி., அட்டிக் அகமது அவரது சகோதாரர் அஷ்ரப் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூன்று கொலையாளிகளை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
உபி.யில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி.யும் தாதாவுமான அட்டிக் அகமது, இவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் நேற்று இரவு பிரக்யாராஜ் நகரில் மருத்துவமனை பரிசோதனைக்காக போலீசார் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்கள் போர்வையில் மறைந்திருந்த லோவேஷ் திவாரி, அருண் மவுரியா, சன்னி ஆகிய மூன்று நபர்கள் போலீசார் முன்னிலையில் அட்டிக் அஹமதுவையும் அஷ்ரப்பையும் சுட்டுக்கொன்றனர்.
சம்பவ இடத்திலேயே போலீசாரிடம் சிக்கிய மூன்று கொலையாளிகள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இன்று பிரக்யாராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு
இதற்கிடையே சுட்டுக்கொல்லப்பட்ட அட்டிக் அஹமது சகோதரர்கள் உடல் பிரக்யாராஜ் மோதிலால் நேரு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. இதில் அட்டிக் அஷமது உடலில் 8 தோட்டாக்களும், அஷ்ரப் உடலில் 6 தோட்டாக்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின் இருவர் உடல்களையும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
Advertisement