Honda Scooter on-Road price Tamil Nadu and engine Specs: ஹோண்டா ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலை பட்டியல் – ஏப்ரல் 2023

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல், என்ஜின், மைலேஜ் உட்பட அனைத்து விபரங்களை தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

ஸ்கூட்டர் சந்தையில் முதன்மையான ஆக்டிவா ஸ்கூட்டர் உட்பட ஆக்டிவா 125, டியோ மற்றும் கிரேஸியா என மொத்தம் நான்கு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.

2023 Honda Activa 6G

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் H-smart எனப்படுகின்ற ரிமோட் மூலம் இயங்கும் வசதி கொண்ட வேரியண்ட் STD மற்றும் DLX என மொத்தம் மூன்று விதமான வேரியண்ட் உடன் கூடுதலாக பிரீமியம் வேரியண்ட் என்ற ஸ்பெஷல் எடிசன் விற்பனையில் கிடைக்கின்றது.

டிரம் பிரேக்கினை மட்டும் பெற்றுள்ள ஆக்டிவா ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கி வருகின்றனர். ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ பிளெஷர் பிளஸ், மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 ஆகும்.

2023 Honda Activa 6G
என்ஜின் (CC) 109.51 cc
குதிரைத்திறன் ([email protected]) 7.72 bhp @ 8000 rpm
டார்க் ([email protected]) 8.90 Nm @ 5500 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 48 Kmpl

2023 ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 93,985 முதல் ₹ 1,00,456 வரை ஆகும்.

2023 Honda Activa 125

125cc சந்தையில் உள்ள ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் ரிமோட் மூலம் இயங்கும் வசதிகள் கொடுக்கப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷனுடன் மிக நேர்த்தியாக அலாய் வீல் ஆப்ஷனையும் கொண்டுள்ளது.

இந்த பிரிவில் போட்டியாக சுசூகி ஆக்செஸ் 125, யமஹா ஃபேசினோ, டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போன்றவை விற்பனையில் உள்ளது.

2023 Honda Activa 125
என்ஜின் (CC) 124 cc
குதிரைத்திறன் ([email protected]) 8.19 bhp @ 6250 rpm
டார்க் ([email protected]) 10.4 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

2023 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 99,100 முதல் ₹ 1,07,456 வரை ஆகும்.

2023 Honda Dio

பிரசத்தி பெற்ற டியோ ஸ்கூட்டரில் 110சிசி என்ஜின் பெற்றதாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் கிடைக்கின்ற இந்த மாடலில் டிரம் பிரேக் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. கூடுதலாக இந்த ஸ்கூட்டரில் பாடி ஸ்டிக்கரிங் பெற்ற டியோ ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

டியோ ஸ்கூட்டருக்கு ஹீரோ ஜூம்  சவாலாக உள்ள நிலையில் மற்ற 110சிசி மாடல்களும் போட்டியாக உள்ளது.

2023 Honda Dio
என்ஜின் (CC) 109.51 cc
குதிரைத்திறன் ([email protected]) 7.65 bhp @ 8000 rpm
டார்க் ([email protected]) 9.0 Nm @ 4750 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 47 Kmpl

2023 ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 89,510 முதல் ₹ 96,100 வரை ஆகும்.

2023 Honda Grazia

125சிசி சந்தையில் கிடைக்கின்ற மற்றொரு ஹோண்டா ஸ்கூட்டர் கிரேஸியா ஸ்போர்ட்டிவான தோற்ற அமைப்பினை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாடலும் ஆக்டிவா 125 என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரின் போட்டியாளராக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ், சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட், யமஹா ரே ZR, மற்றும் டெஸ்ட்டினி 125 போன்றவை உள்ளது.

2023 Honda Grazia
என்ஜின் (CC) 123.97 cc
குதிரைத்திறன் ([email protected]) 8.14 bhp @ 6000 rpm
டார்க் ([email protected]) 10.3 Nm @ 5000 rpm
கியர்பாக்ஸ் CVT
மைலேஜ் 46 Kmpl

2023 ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,01,157 முதல் ₹ 1,07,760 வரை ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.