Lokesh Kanagaraj: லோகேஷ் இயக்கத்தில் இதனால் தான் நடிக்கவில்லை…உண்மையை உடைத்த லாரன்ஸ்..!

ஏப்ரல் 14 முதல் 17 வரையிலான பிளாக்பஸ்டர் Value Days- வீடு, சமையலறை மற்றும் கோடைகால உபகரணங்களுக்கான அற்புதமான சலுகைகளைப் பெறுங்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை துவங்கிய லோகேஷ் கனகராஜ் இதுவரை நான்கு படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார் என்றாலும் இந்தியளவில் பிரபலமான இயக்குனராக உருவெடுத்துள்ளார்.

அதற்கு அவர் இயக்கிய படங்களின் வெற்றிகள் தான் காரணம். கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து தன் படங்களின் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் லோகேஷ். அதன் காரணமாகவே இவரின் படங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும், இவருக்கென்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகின்றது.

Leo,PS2: பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் லியோ அப்டேட் கேட்ட ரசிகர்கள்..குந்தவை கூறிய அப்டேட் இதுதான்..!

இந்நிலையில் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகின்றார் லோகேஷ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. குறிப்பாக லியோ திரைப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷ் அவரின் ஸ்டைலிலேயே உருவாக்க இருக்கின்றார். மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில கமர்ஷியல் விஷயங்களை சேர்ந்திருந்த லோகேஷ் லியோ படத்தை தன் பாணியில் முழுக்க முழுக்க உருவாக்கி வருகின்றார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

எனவே இப்படத்தின் மூலம் நாம் விஜய்யை வேறொரு கோணத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து லோகேஷின் இயக்கத்தில் பலர் நடிக்க ஆர்வம் தெரிவித்து வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் அந்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க தான் லோகேஷ் திட்டமிட்டார். இதன் காரணமாக லாரன்ஸை அணுகியுள்ளார் லோகேஷ். ஆனால் அந்த சமயத்தில் ராகவா லாரன்ஸ் பல படங்களில் கமிட்டாகி இருந்ததால் லோகேஷிற்கு கால் ஷீட் கொடுக்கமுடியாமல் போனதாம்.

இதனை லாரன்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் எதிர்காலத்தில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் கூறியுள்ளார் லாரன்ஸ். இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியானபோது லோகேஷ் கனகராஜும் லாரன்ஸை தான் சந்தானம் கதாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்கலாம் என இருந்தேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.