Shalu Shamu:நண்பர்களுடன் இரவு பார்ட்டி..காணாமல் போன ஐபோன்.. நண்பர்கள் மீது சந்தேகப்படும் ஷாலு ஷம்மு!

சென்னை : நண்பர்களுடன் இரவு பார்ட்டிக்கு சென்ற ஷாலு ஷம்முவின் விலை உயர்ந்த ஐபோன் காணாமல் போனதால், நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

சூரி, சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு ஷம்மு, அப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்

சினிமாவில் சிறுசிறு வேடத்தில் நடித்து வந்த ஷாலு ஷம்மு, இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோவை போட்டு இன்ஸ்டா குயினாகவே மாறிவிட்டார்.

நடிகை ஷாலு ஷம்மு : இணையத்தில் எப்போதும் பிஸியான நடிகையாக இருக்கும் ஷாலு ஷம்மு தனது விலை உயர்ந்த ஐபோனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ஷாலு ஷம்மு இரண்டு மாதங்களுக்கு முன் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை வாங்கி அதனை பயன்படுத்தி வந்துள்ளார்.

ஐபோனை காணவில்லை : கடந்த 9ந் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டியில் நண்பர்களுடன் கலந்து கொண்டுள்ளார் ஷாலு ஷம்மு. நைட் பார்ட்டி முடிய நேரமானதால், சூளைமேட்டில் உள்ள அவரது தோழி வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

actress shalu shamu lost her 2 laksh costly iphones

காவல்நிலையத்தில் புகார் : இதையடுத்து பார்ட்டி நடைபெற்ற நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தேடி பார்த்துள்ளார். மேலும், அந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் செல்போன் தொலைந்த விஷயத்தை கூறி விசாரித்துள்ளார். எவ்வளவு தேடிப்பார்த்தும் செல் போன் கிடைக்காததால் கவலை அடைந்த ஷாலு ஷம்மு, பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் காணாமல் போனதில் நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தீவிர விசாரணை : ஷாலு ஷம்மு அளித்த புகாரை அடுத்து, நைட் பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஷாலு ஷம்முவின் விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதும், அதில் நண்பர்கள் மீதே சந்தேகம் இருப்பாக கூறியது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செல்போனில் தான் வங்கி கணக்கு குறித்த பல தகவல்கள் ஷாலு ஷம்மு குறித்து வைத்து இருக்கிறாராம் இதனால் தான், அவர் பதறுவதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.