லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார்.
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்தீக் அகமது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, காவல் துறை தலைவர் ராஜ்குமார் விஸ்வகர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி காவல் துறை தலைவர் ராஜ்குமார் விஸ்வகர்மா, முதன்மை செயலாளர் சஞ்சய் பிரசாத், காவல் துறை சிறப்பு டி.ஜி. பிரசாந்த் குமார் ஆகியோர் சிறப்பு விமானத் தில் லக்னோவில் இருந்து நேற்று பிரயாக்ராஜ் சென்றனர். அத்தீக் அகமது மற்றும் அவரது தம்பி கொலை குறித்து 3 பேரும் நேரடி யாக விசாரணை நடத்த உள்ளனர்.
காவல் துறை தலைவர் ராஜ் குமார் விஸ்வகர்மா கூறும்போது, “சமூக வலைதளங்களில் வன் முறையை தூண்டும் பதிவுகளை வெளியிடுவோர், சாலை, தெருக் களில் வெறுப்புணர்வை தூண்டும் பதாகைகளை ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேசம் முழுவதும் சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகங்கள் மற்றும் அந்த கட்சிகளின் தலைவர்கள் வீடுகளின் முன்பு பலத்தபாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பிரயாக்ராஜ் மட்டுமன்றி அயோத்தி, வாரணாசி, மதுரா உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அயோத்தி ராமர் கோயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அங்கு சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. பிரயாக்ராஜ் உட்பட பதற்றமான பகுதிகளில் இணைய சேவை துண் டிக்கப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசம் முழுவதும் உஷார் நிலை யில் வைக்கப்பட்டிருக்கிறது.