புதுடில்லி: உலகளாவிய புத்த மாநாடு வரும் ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் டில்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இது குறித்து மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கூறியது,
உலகளாவிய புத்த மாநாடு வரும் ஏப்.20, 21 ஆகிய இருநாட்கள் டில்லியில் துவங்குகிறது. இதில் பங்கேற்க உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைமை பெளத்த துறவிகள், நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.புத்தரின் நினைவுச்சின்னங்கள் பாதுகாத்தல் ,சிறந்த பௌத்த சிந்தனையாளர்களை ஒரே தளத்தில் கொண்டு வருதல் இம்மாநாட்டின் நோக்கம்,.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement