அகமதாபாத்: மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து நடத்தும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குஜராத்தில் இன்று தொடங்குகிறது.
மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிரா தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள் மேலும் இந்தியக் கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையே வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் இன்று முதல் 26 வரை குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது
முன்னதாக மதுரையிலிருந்து செளராஷ்டிரா சங்கமத்திற்குச் செல்லும் முதல் சிறப்பு ரயிலை மதுரையில் கொடியசைத்து தொடங்கி வைத்ததை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இது குறித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இந்த சிறப்பான புத்தாண்டு தினத்தில், மதுரையில் இருந்து வெரவல் வரை ஒரு சிறப்பு பயணம் தொடங்கியுள்ளது. செளராஷ்டிரா சங்கமம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இது மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
ஜெகதீஷ் ஷெட்டரை வளைக்கும் காங்கிரஸ்? இரவு நடந்த முக்கிய சந்திப்பு.. கர்நாடகாவில் பாஜகவுக்கு அதிர்ச்சி
மற்றொரு பதிவில், இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ள பிணைப்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார். செளராஷ்டிரா சங்கமத்திற்கானப் பயணம் ஏற்படுத்தியுள்ள பண்டிகை சூழல் குறித்துத் தெரிவித்துள்ள பிரதமர், ” செளராஷ்டிரா சங்கமத்தை நோக்கிய உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.