இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியை பின்தொடர்வதை, விராட் கோலி தற்போது நிறுத்தியுள்ளார்.
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா அண்மையில் ஸ்டிங் ஆப்ரேஷனில் பேசிய விஷயம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விராட் கோலி – கங்குலி குறித்து அவர் தெரிவித்த கருத்துதான் அது.
டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதும் ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் 50 ஓவர் போட்டிகளுக்கு விராட் கோலி கேப்டனாக நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பின்னர் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாக ரோகித்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டி20, ஒரு நாள் போட்டிகளுக்கு வேறு வேறு கேப்டன்கள் இருக்க வேண்டாம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கங்குலி கூறினார்.
நான் பதவி விலகுகிறேன் என்று சொன்னபோது யாரும் அதற்கு மறுப்புச் சொல்லவில்லை. எல்லோரும் ஏற்றுக்கொள்ளவே செய்தனர். அறிவிப்புக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்புதான் அவர்கள் முடிவு தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றார் கோலி.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்டிங் ஆப்ரேஷனில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா, பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கவில்லை.
இதுவே கோலியின் கேப்டன்சி பறிப்பிற்கு காரணமாக இருந்தது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது. இந்நிலையில் அண்மையில் டெல்லி பெங்களூரு அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் கங்குலி – கோலி கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலி கங்குலியை பின் தொடருவதை நிறுத்தியுள்ளார். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இருக்கும் மோதல் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
newstm.in