சூடான்: சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கே உள்ள இந்தியர்கள் உதவி பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது.
ஆப்பிரிக்காவில் இருக்கும் மிக பெரிய நாடுகளில் ஒன்றாக சூடான் இருக்கிறது. அங்கே அதிபர் அல் பஷீர் ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், கடந்த 2021இல் அங்கே அப்தல்லா ஹம்டோக் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பைபற்றியது.
இருப்பினும், அங்கே நடக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கே உள்ள பல துணை ராணுவ குழுக்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட குழுக்களில் Rapid Support Forces முக்கியமானதாகும்.
சூடான்: இவர்கள் கடந்த காலங்களில் சூடான் ராணுவத்தைக் குறிவைத்தே தாக்குதல் நடத்து வந்தன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. அங்கே இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சூடானில் குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்தியர்கள் இருக்கும் நிலையில், ஏற்கனவே அங்கிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படியும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஏற்கனவே இந்தியர்கள் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
100 பேர் பலி: இதனிடையே சூடான் தலைநகர் கார்ட்டூமில் மட்டும் இந்தத் தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூடானின் ராணுவத்திற்கும் துணை ராணுவக் குழுவிற்கும் இடையே சண்டை மூன்றாவது மாளாக தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், இதேபோல சண்டை இருந்தால், அமைதியான முறையில் குடிமக்கள் ஆட்சிக்கு மாற வாய்ப்பு குறைவதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இரு தரப்பும் சண்டையைத் தொடர மற்றொரு தரப்பு தான் காரணம் என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகிறார்கள். கடந்த சனிக்கிழமை முதல் ஹெமெட்டி என்று அழைக்கப்படும் மொஹமட் ஹம்டன் டகாலோ தலைமையிலான ராணுவத்திற்கும் கிளத்தியை முன்னெடுக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையோ மோதலே தொடர்பு வருகிறது.
உதவி மையம்: இந்த மோதல் தொடரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்குத் தகவல் மற்றும் உதவி வழங்குவதற்காகக் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ளது. அங்கே உதவி தேவைப்படுவோர் மின்னஞ்சல் அல்லது மொபைல் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
சூடானில் உள்ள இந்தியர்கள் உதவி பெற தொலைப்பேசி: 1800 11 8797 (இலவச எண்) +91-11-23012113; +91-11-23014104; +91-11-23017905; மொபைல்: +91 9968291988 ஆகியோ மொபைல்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.