சென்னை: திருமணம் எப்போது என்ற கேள்விக்கு வடிவேலுவின் மீம்ஸ் போட்டு பதில் தந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.தமிழில் கடைசியாக சாணிக் காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். அவரது பான் இந்தியா படமான தசரா சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளத்தில் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ் வடிவேலுவின் மீம்ஸை போட்டு பதிலளித்தார்.
அப்புகைப்படம் திருமணம் பற்றி கீர்த்தி சுரேஷ் தற்போது யோசிக்கவில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது. உடனே இப்படி சொல்லிட்டீங்களே. கல்யாண சாப்பாடு இப்போதைக்கு இல்லையா என ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவிக்க, சில ரசிகர்களோ நல்ல முடிவு. நாங்கள் இருக்கிறோம் என ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளனர். இந்த பதில்களையெல்லாம் ரசிப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் பரவியது. இதையடுத்துதான் ரசிகர்கள், கீர்த்தியின் திருமணம் பற்றி கேள்வி கேட்டுள்ளனர்.
The post திருமணம் எப்போது? வடிவேலு மீம்ஸ் போட்டு கீர்த்தி சுரேஷ் பதில் appeared first on Kollywood News | Kollywood Images – Cinema.dinakaran.com.