ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார்.
ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்று வந்தனர். இந்த சூழலில் ப்ளூ டிக் சந்தாவை மேற்கூறிய இந்த அங்கீகரிக்கப்பட்ட பிரபலங்களும் செலுத்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்த கணக்குகளை பயன்படுத்தி வருபவர்கள் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சந்தா செலுத்தவில்லை என்றால் ‘ப்ளூ டிக்’ அங்கீகாரத்தை இழக்க வேண்டி இருக்கும் என தெரிகிறது.
தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதனை புரமோட் செய்யும் விதமாக தற்போது நடிகை திரிஷா ட்விட்டரில் தனது பெயரை மாற்றி இருக்கிறார். அவர் பெயரை குந்தவை என மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே திரிஷ் என மாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை.
அதே போல் அருண்மொழி வர்மன் என நடிகர் ஜெயம் ரவி மாற்றியதால் இவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது.ட்விட்டர் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்து விடும் அதனால் த்ரிஷாவும் ஜெயம் ரவி இருவரின் ப்ளூ டிக்கையும் நீக்கியிருக்கிறது ட்விட்டர் நிர்வாகம்.