உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் செயல்பட்டு வரும் அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவிற்கு காலையில் ஓய்வுபெற்ற மருத்துவர் சப்தர் அலி (65) என்பவர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொள்ள சப்தர் அலி பல்கலைக்கழக பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு சுற்றி திரிந்த நாய்கள் கூட்டம் ஒன்று அவரை தாக்கி கொன்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவை போலீசார் ஆய்வுசெய்ததில், அந்த முதியவரை அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த நாய்கள், தாக்கியதால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
நடைபயிற்சியில் ஈடுபட்ட முதியவரை சுமார் 7 முதல் 8 நாய்கள் வரை அவரை விடாமல் கடித்துக்குதறின. பின்னர் அவரை அந்த நாய்கள் தரதரவென இழுத்துச்சென்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. நாய்கள் தாக்கியதில் உயிரிழந்த முதியவரின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.