உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை அவரது மனைவி நான்கு கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்த சிவா (28) என்பவருக்கு மாதுரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய நான்கு நபர்களுடன் மாதுரிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த சிவா, மனைவியை கண்டித்துள்ளார். அதன்பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக மாதுரி நினைத்தார்.
எனவே, கள்ளக்காதலர்கள் 4 பேர் மூலம் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கணவர் சிவாவுக்கு மதுவிருந்து கொடுத்து போதையானதும் அனைவரும் சேர்ந்து அடித்தே கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் சிவாவின் சகோதரர் வினோத்திற்கு தெரியவந்துள்ளது. அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாதுரி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
newstm.in