அதிக ரன் அடித்த அணி என்ற சாதனையை சிஎஸ்கே நூலிழையில் தவறவிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை – பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதல்பாதி முடிந்துள்ள நிலையில் சென்னை 20 ஓவர்களில் 226 ரன்கள் அடித்துள்ளது.
சென்னை அணி வீரர் கான்வே அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய ஷிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. இதன் மூலம் சிஎஸ்கே அதிக ஸ்கோர் சாதனையை நூலிழையில் தவறவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 228 ரன்கள் குவித்தது. அதை கடந்திருந்தால், சிஎஸ்கே புதிய சாதனை படைத்திருக்கும். ஆனால் 3 ரன்கள் இல்லாததால் அந்த சாதனையை சென்னை தவறவிட்டுள்ளது.
newstm.in