பிரபல நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்!!

பிரபல நடிகையை அவரது கணவர் நிகழ்ச்சி ஒன்றில் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சனா கான், தொடர்ந்து பயணம், தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தார். இவர் 2020ஆம் ஆண்டு முஃப்தி அனஸ் சயத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அண்மையில் மும்பையில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் தனது கணவர் முஃப்தி அனஸ் சயத்துடன் சனா கான் கலந்துகொண்டார். இந்த விழாவில் தனது அவரது கணவர் சனா கானை கையைப் பிடித்து தரதரவென இழுத்து செல்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்ப்பமாக இருக்கும் பெண்ணை இப்படியா இழுத்து செல்வது என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து சனா கான் விளக்கம் அளித்துள்ளார். அதில், எங்கள் கார் ஓட்டுநரை எங்களால் அழைக்க முடியவில்லை. நீண்ட நேரம் அங்கு நின்றதால் எனக்கு கஷ்டமாக இருந்தது.

அதனால் எனது கணவர் என்னை அப்பகுதியிலிருந்து விரைவைாக அழைத்து செல்லும் நோக்கில் அப்படி செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.