நடிகரும், சமத்து மக்கள் கட்சியின் கட்சி தலைவருமான சரத்குமார், ஆபாச இணைய தளங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது நடிகர் சரத்குமாரை பலரும் விமர்சித்தனர். ரம்மி விளம்பரத்தில் அவர் நடித்துள்ளதால், பலரும் அவரை ரம்மி நாயகன் என்று விமர்சித்தனர்.
அதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ஆன்லைன் ரம்மியை தடை செய்யவில்லை என்பதால் அந்த விளம்பரத்தில் நடித்தேன் என்று பதில் கூறினார். ஏன் தடை செய்யவில்லை என்று அரசிடம் கேளுங்கள் என்றார்.
தற்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது சரத்குமார் வேறுமாதிரி யோசித்து, புது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், சூதாட்டம் தடை என்று சொல்லும்போது அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் ஆபாச இணையதளங்களையும் இந்தியாவில் தடை செய்ய வேண்டும். அந்த வகையில், பார்னோகிராஃபி உள்ளிட்ட செயலிகள் இணையதளங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
newstm.in