வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் வெயில் வெப்பம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து 13 பேர் பலியாகினர்.
நவி மும்பையில் மாநிலத்தின் பிரபல சமூக ஆர்வலர்களுக்கு மாநில அரசு சார்பில் பூஷண் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். திறந்த வெளி மைதானத்தில் இந்த விழா நடந்தது. வெயில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் மயங்கினர். இதில் 13 பேர் இறந்தனர். 120 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிப்புக்குள்ளாகினர்.

பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்த குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில், 5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
Advertisement